அபுதாபியில் பால்கனியில் துணிகளை காயவைக்கும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொட்ரபாக அபுதாபி நகர முனிசிபாலிட்டி, நகரின் அழகிய தோற்றத்தை பராமரிக்கவும் மற்றும் பொது இடங்களில் துணிகளை காயவைக்க முறையான விதிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது எச்சரிக்கையை வெளியிட்டது.
முன்னதாக பால்கனிகளில் தவறாக துணிகளை காயவைத்தால் 1,000 திர்ஹம்ஸ் மற்றும் அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்று குடிமை அமைப்பு எச்சரித்திருந்தது.
அபார்ட்மெண்டின் பால்கனியில் துணிகளை காயவைப்பதால் கட்டிடத்தின் வடிவங்க சிதைக்கப்படுகிறது. குடியிருப்பாளர்கள் அழகிய தோற்றத்தை பராமரிக்க வேண்டும். மேலும் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக பயன்படுத்தக்கூடாது” என்று நகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பால்கனிகளில் துணிகளை தொங்கவிடுவதை தவிர்க்க, துணிகளை காயவைக்கும் எலக்டிரானிக் அலமாறிகளை பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.