துபாயில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 14 மணிநேரம் கட்டணச் சேவையாக பார்க்கிங் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை இருந்த இலவச பார்கிங் வசதி தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்படும்.
சாலையோர பார்க்கிங்கில் அதிகபட்சமாக 4 நான்கு மணிநேரம் தொடர்ந்து வாகனங்களை நிறுத்தலாம், வாகன நிறுத்துமிடங்களில் 24 மணிநேரம் நிறுத்தலாம், மற்றும் பல அடுக்குமாடி வசதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் 30 நாட்கள் நிறுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான இப்புதிய விதிமுறைகளை துபாய் இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.