இனி கைப்பேசி டேட்டா கட்டணங்களை பற்றிய எந்த வித கவலையும் வேண்டாம் – வந்துவிட்டது புதிய திட்டம்.!

No more Mobile Bills - UAE Bans Pay Per-Use Data

இனி கைப்பேசி கட்டணங்களை பற்றிய எந்த வித கவலையும் வேண்டாம். ஆம், அமீரகத்தில் இனி நீங்கள் பயன்படுத்தும் டேட்டா விற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் முறை (Pay Per-Use Data) நிறுத்தப்படுகிறது.

Etisalat மற்றும் Du ஆகிய அமீரக தொலைத்தொடர்பு நிறுவனங்களில் TRA அறிவுறுத்தலின் படி, இனி நீங்கள் பயன்படுத்தும் டேட்டா விற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் சேவையை நிறுத்தம் செய்து கொள்ளலாம். அதுவும் வாடிக்கையாளர்களாகிய உங்களின் கோரிக்கை இருந்தால் மட்டுமே இடை நிறுத்தம் செய்யமுடியும்.

TRA தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், சந்தாதாரர்களை அதிக கட்டணங்களில் இருந்து பாதுகாக்க இந்த பயன்படுத்தும் டேட்டா விற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் முறை நிறுத்தம் செய்ய முடியும், அதுவும் சந்தாதாரர்களின் தெளிவான கோரிக்கை இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த அரிய சலுகையை பயன்படுத்தி அதிக கட்டணங்களில் இருந்து விடுபட்டு சிறந்த தொலைதொடர்பு சேவையை பெறுங்கள்.