அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்குள் நுழைய AL HOSN கிரீன் பாஸ் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.
அதன் எதிரொலியாக வரும் 28 பிப்ரவரி 2022 திங்கட்கிழமை முதல் AL HOSN கிரீன் பாஸ் தேவை நீக்கப்படுவதாக அபுதாபி பேரிடர் குழு அறிவித்துள்ளது.
அபுதாபிக்குள் நுழையும் குடியிருப்பாளர்களை சோதனை செய்வதற்காக அபுதாபி எல்லையில் வைக்கப்பட்டிருந்த EDE ஸ்கேனர்களயும் அகற்றுவதாக பேரிடர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சில மாதங்களாக அமீரகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அபுதாபிக்குள் நுழைய AL HOSN கிரீன் பாஸ் தேவைகள் கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது வழக்கம்போல் அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால், கடற்கரைகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல AL HOSN கிரீன் பாஸ் அமலில் இருந்து வருகிறது.