இந்தியாவலிருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கு முந்தைய GDRFA/ICA அனுமதிகள் தேவையில்லை என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கான RT-PCR பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு முறையில், “துபாய் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் GDRFA/ICA அனுமதி தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அமீரகத்தில் குறைந்து விட்டதால், இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அமீரக அரசு படிப்படியாக நீக்கி வருகிறது. ஆனால் இந்தியாவிலிருந்து அமீரகம் வருவதற்கு முன் பயணிகள், 48 மணிநேரத்திற்கான நெகடிவ் PCR பரிசோதனை முடிவை பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தெரிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் “பயணிகள் துபாய்க்கு வந்தவுடன் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், நெகடிவ் முடிவு வெளியாகும் வரை சுய தனிமைப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும்” என்றது.
இந்தியாவிலிருந்து அமீரகம் பயணிக்கும் பயணிகளுக்கான இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.