UAE Tamil Web

இனி அமீரகத்திலிருந்து இந்தியா செல்ல PCR பரிசோதனை தேவையில்லை!

இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட பயணிகள், இனி அமீரகத்தில் இருந்து இந்தியா செல்வதற்கு முன் RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியதில்லை என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து “இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்காள் மட்டும் RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியதில்லை என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை ஏர் சுவிதா இணையதளத்தில் பயணிகள் (https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration) பதிவேற்ற வேண்டும்.

முன்னதாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏழு நாள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது இப்புதிய அறிவிப்பு வந்துள்ளது.

அமீரகத்தில் வசிப்பவர்களில் அதிகமானோர் அமீரகத்திலேயே தடுப்பூசி செலுத்திருப்பதால், அமீரகத்திலிருந்து இந்தியா செல்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பயணிகளும் ஏர் சுவிதா இணையதளத்தில் கடந்த 14 நாட்களின் பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் சுயப் படிவத்தை பதிவேற்ற வேண்டும். இத்தகைய நடைமுறை விதிகளை தவறினால் பயணிகள் இந்தியா செல்ல முடியாது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

53 Shares
Share via
Copy link