UAE Tamil Web

துபாயில் பள்ளி வளாகத்தில் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை.. KHDA அறிவிப்பு

அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.

இந்நிலையில் அமீரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அவசர நெருக்கடி மற்றும் தேசிய ஆணையத்தின் பேரிடர் மேலாண்மையான (NCEMA) அறிவித்திருந்தது.

இதன் எதிரொலியாக துபாய் பள்ளிகளின் வெளிப்புர பகுதிகளில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையமான (KHDA) துபாயில் உள்ள தனியார் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆரம்ப குழந்தை பருவ மையங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களில் இதனைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமீரக கல்வி கட்டுப்பாடு ஆய்வாளர் கூறுகையில், “இனி பள்ளி வெளிப்பகுதிகளில் முகக்கவசம் அணிய தேவையில்லை. கொரோனா தொற்றால் பாதித்துள்ள நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கொரோனா அறிகுறி இல்லாத மாணவர்கள், ஆசிரியகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல் அவர்கள் வகுப்புகளில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம்.

கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லலாம் என்றும், கொரோனா தொற்று உள்ளவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, நெகடிவ் சான்றிதழை பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

1 Share
Share via
Copy link