UAE Tamil Web

இந்தியாவின் இந்த நகரங்களுக்கு வர PCR டெஸ்ட் தேவையில்லை – ஏர் இந்தியா அறிவிப்பு..!

Air_India_Reuters

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் இந்தியாவின் மேற்குவங்கம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வரும்பட்சத்தில் அவர்கள் PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான ஆவணத்தை பயணிகள் சமர்ப்பிக்கவேண்டும் என அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்,” கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் அதற்கான செல்லுபடியாகும் ஆவணத்தை வைத்திருக்கவேண்டும். பயண நாளுக்கு குறைந்தபட்சம் 15 நாளுக்கு முன்னர் இரண்டாவது டோசை பயணி எடுத்திருக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Air_India_Reuters
0 Shares
Share via
Copy link