UAE Tamil Web

இனி AL HOSN அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் பெற PCR சோதனை தேவையில்லை..!

பொதுமக்கள் அபுதாபிக்கு செல்ல தங்களது Al Hosn அப்ளிகேஷனில் உள்ள கிரீன் பாஸை காட்ட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

முன்னதாக கிரீன் பாஸ் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களிருந்து 14 நாட்களாகக் குறைக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து PCR டெஸ்ட் எடுத்துக்கொண்டால் அவர்களது Al Hosn அப்ளிகேஷனில் 30 நாட்களுக்கு கிரீன் பாஸ் தோன்றும். 30 நாட்கள் கழிந்த பின்னர் மீண்டும் PCR டெஸ்ட் எடுக்க வேண்டும்.

கொரோனா நோய் பாசிடிவ் பெற்று 10 நாட்கள் தனிமைப்படுத்தியப்பின் Al Hosn செயலியில் உள்ள சிவப்பு நிற ஸ்டேட்டஸ் 11 ஆம் நாளில் தானாகவே கிரீன் பாஸாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன் பாஸ் 30 நாட்களுக்கு இருக்கும். அடுத்த 60 நாட்களில் 14 நாட்களுக்கு ஒருமுறை PCR டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும் என்று Al Hosn அன்ளிகேஷனில் குறிப்பட்டுள்ளது.

பரிசேதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டால் 90 நாட்களுக்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கிரீன் பாஸ் நிலையைப் பெற, 14 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை செய்ய வேண்டும். Al Hosn செயலியில் கிரீன் பாஸ் இருந்தால் மட்டுமே அபுதாபிக்கு நுழைய முடியும்.

13 Shares
Share via
Copy link