UAE Tamil Web

72 மணி நேர பயணத்திற்கு PCR டெஸ்ட் இனி தேவையில்லை – எதிஹாட் அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்று காரணமாக விமானங்களில் பயணிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. விமானங்களில் பயணிக்க உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

More than a million tested for COVID-19 in UAE | AW இந்த நிலையில் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அபுதாபியில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் 72 மணி நேரத்தில் மீண்டும் அபுதாபிக்கு திரும்பும் பட்சத்தில் அவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் காட்ட அவசியமில்லை என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் சிரமத்தை ஓரளவு குறைக்கலாம் என்றும் எதிஹாட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக விமானங்களில் பயணிப்பதற்கே கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக இருந்த நிலையை மாற்றி தற்போது 72 மணி நேர பயணத்திற்கு சலுகை அளித்திருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

1 Share
Share via
Copy link