அமீரகத்தில் ஏப்ரல் 11ஆன இன்று முதல் குடியிருப்பாளர்களின் எமிரேட்ஸ் ஐடி அவர்களின் ரெசிடெண்ட் ஆவணமாக செயல்படும். மேலும் ரெசிடெண்ட் விசாவுக்கு பதிலாக எமிரேட்ஸ் ஐடி பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
நாளை முதல் குடியிருப்பாளர்கள் ரெசிடெண்ட் விசா ஸ்டாம்ப் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. இனி எமிரேட்ஸ் ஐடி எனும் ஒரே விண்ணப்பத்தில் செயல்படலாம். மேலும், தங்கள் பாஸ்போர்ட்டுகளை ரெசிடெண்ட் விசா முத்திரையிடுவதற்காக அரசு அலுவலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
இது குறித்து அமீரகத்தின் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) உயர் அதிகாரியை கூறுகையில், “இந்த நடவடிக்கை 30 முதல் 40 சதவிதம் ரெசிடெண்ட் விசா ஸ்டாம்ப் பெறுவதற்கான முயற்சிகளையும் நேரத்தையும் கனிசமாக குறைக்கும்” என்றார்.
பாஸ்போர்டில் அடிக்கப்படும் ரெசிடெண்ட் விசா ஸ்டாம்ப் போன்று எமிரேட்ஸ் ஐடியிலும் விசா தொடர்புடைய தகவல்கள் உள்ளது. மேலும் எமிரேட்ஸ் ஐடிகள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவுகளை கொண்டுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் ICP ஒருங்கிணைத்து, சமீபத்திய குடியிருப்பாளர்களுக்கான இந்த புதுப்பித்தலை அறிவித்தது.
அமீரகத்துக்கு வெளியே வசிப்பவர்களுக்கு, பாஸ்போர்ட் ரீடர் மூலம் அவர்களின் நுழைவு நிலையைச் அதிகாரிகள் சரிபார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.