UAE Tamil Web

துபாய் அல் மக்தூம் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சாலிக் கட்டணம் இலவசம் – RTA

ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் உள்ள அல் மக்தூம் பாலத்தில் சாலிக் கட்டணம் இல்லை என்பதை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) உறுதிப்படுத்தியுள்ளது.

அமீரகத்தில் புதிய வார இறுதி நாட்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அல் மக்தூம் பாலத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் சாலிக் கட்டணம் இலவசம் என்று RTA உறுதி செய்துள்ளது.

சாலிக் என்பது துபாயின் தானியங்கி சாலை கட்டண வசூல் அமைப்பாகும். ஒவ்வொரு முறையும் ஒரு வாகனம் சாலிக் டோல் பாயின்ட் வழியாகச் செல்லும்போது, ப்ரீபெய்டு கணக்கிலிருந்து 4 Dh4 கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் தற்போது வெள்ளிக்கிழமைகளில் அல் மக்தூம் பாலத்தை கடப்பதற்கு சாலிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். டெய்ரா க்ரீக்கில் உள்ள மிதக்கும் பாலத்தின் புதிய மூடல் நேரத்தைத் தொடர்ந்து இந்த  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து RTA வெளியிட்ட ட்வீட்டில், மிதக்கும் பாலம் மூடப்படும் நேரம் குறித்து தெரிவித்துள்ளது. ஜனவரி 15ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. வார நாட்களில், வழக்கமான நேரப்படி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி முதல் பாலம் மூடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

வார இறுதியில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மூடப்படும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த பாலம் வியாழன் இரவு 10 மணி முதல் சனிக்கிழமை 6 மணி வரை மூடப்பட்டிருந்தது.

மிதக்கும் பாலம் மூடப்படும் நேரங்களில் அல் மக்தூம் பாலம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சாலிக் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் RTA உறுதி செய்துள்ளது.

அதன்படி,  ஐனவரி 15ந் தேதி முதல் மிதக்கும் பாலம் மூடப்படும் நேரங்கள்:

வார நாட்கள்: திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.

வார இறுதி நாட்கள்: சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை.

மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் மட்டும் துபாயில் பொது பார்க்கிங் இலவசம் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிமைகளில் வழங்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 Shares
Share via
Copy link