இனி அமீரகத்தில் டிஜிட்டல் வரி முத்திரைகள் இல்லாமல் சிகரெட்டுகளை விற்க தடை!

The Federal Tax Authority (FTA) has announced that the sale and possession of all types of cigarettes not bearing the Digital Tax Stamps will be prohibited across UAE markets starting from August 1.

ஆகஸ்ட் 1 முதல் டிஜிட்டல் வரி முத்திரைகள் இல்லாமல் சிகரெட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வரி முத்திரைகள் இல்லாத அனைத்து வகையான சிகரெட்டுகளையும் விற்பனை செய்வது மற்றும் வைத்திருப்பது (ஆகஸ்ட் 1, 2019 வியாழக்கிழமை) ஐக்கிய அரபு அமீரக (UAE) சந்தைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, FTA அறிவித்துள்ளது.

இரண்டு வகையான டிஜிட்டல் வரி முத்திரைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சிவப்பு நிற முத்திரை, இதை அனைத்து உள்ளூர் சந்தைகளிலும் மற்றும் Duty Free வருகை ஓய்வு அறைகளிலும் (Arrival Lounges) விற்பனை செய்யப்படும் என்று கூறியுள்ளது. அதே போல் பச்சை நிற முத்திரை கொண்ட புகையிலை பொருட்களை Duty Free புறப்பாடு ஓய்வு அறைகளில் (Departure Lounges) விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டிஜிட்டல் வரி முத்திரைகள் இல்லாத சிகரெட் பாக்கெட்டுகளின் விற்பனையை உள்ளூர் சந்தைகளில் தடை செய்யப்பட்டது. மேலும், தரமற்ற பொருட்களிலிருந்து மக்களை பாதுகாக்க மின்னணு முறையில் கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள அனைத்து சிகரெட் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும், இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

FTA இயக்குநர் ஜெனரல் காலித் அலி அல் புஸ்தானி (Khalid Ali Al Bustani) கூறுகையில், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்பட்ட திறமையான மற்றும் துல்லியமான மின்னணு கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சட்டத்தை வகுத்துள்ளதாகவும், மேலும் தீங்கு விளைவிக்கும் தரம் குறைந்த தயாரிப்புகளின் விற்பனையைத் தடுப்பதற்கான நடைமுறைகளையும் வகுத்து வருவதாக கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலேயே இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரப்போவதாக விழிப்புணர்வு செய்துவிட்டதாக FTA இயக்குநர் ஜெனரல் காலித் அலி அல் புஸ்தானி (Khalid Ali Al Bustani) அவர்கள் கூறினார்.

Loading...