தவணை முறையில் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது துபாய் அரசு…

துபாயில் உங்களுடைய வசதிக்காக தவணை முறையில் அரசு சார்ந்த கட்டணங்கள் மற்றும் அபராதங்களை செலுத்தும் முறையை துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் மற்றும் செயற்குழு தலைவர் ஷைக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் சிறப்புகள் பின்வருமாறு:

சிறப்பம்சங்கள்:

1. செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் கண்டிப்பாக நிதித்துறை அமைச்சகம் வரையறுத்த பட்டியலின் கீழ் வரவேண்டும்.

2. கட்டணங்கள் தவணை முறையில் செலுத்த தனிநபர்க்கு 10,000 திரஹம் மற்றும் தொழில்களுக்கு 100,000 திரஹம் மேல் இருக்க வேண்டும்.

3. அதே போல் அபராதங்கள் நிதித்துறை அமைச்சகம் பட்டியலின் கீழ் வரவேண்டும்.

4. தனிநபருக்கு 5,000 திரஹம் மற்றும் தொழில்களுக்கு 20,000 திரஹம் மேல் இருந்தால் மட்டுமே தவணை முறையில் அபராதங்கள் செலுத்த முடியும்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் அனைத்து தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் அரசு சார்ந்த கட்டணங்கள் மற்றும் அபராதங்களை தடை இன்றி செலுத்துவதை அதிகரிப்பதும், மேலும் அவர்களின் நிதி சார்ந்த பொறுப்புகளை கணக்கில் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக பட்டத்து இளவரசர் ஷைக் ஹம்தான் கூறியுள்ளார்.

இதன் மூலம் நாட்டு மக்கள் தடையின்றி தங்கள் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை செலுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Source – Gulf News

Loading...