புதிய துபாய் பேருந்து வழித்தடங்களை நீங்களே வடிவமைத்து பரிந்துரைக்கலாம்..!

Now, propose new Dubai bus routes using RTA app (Photo : Khaleej Times)

துபாய் குடியிருப்பாளர்கள் தற்போது RTA துபாய் ஸ்மார்ட் செயலியின் மூலம், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு (RTA) புதிய வழித்தடங்களை வடிவமைத்து பரிந்துரை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பொது போக்குவரத்து பயனர்கள்:

  • புதிய வழித்தடங்களை பரிந்துரை செய்யலாம்.
  • ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள வழித்தடங்களை மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்யலாம்.
  • புதிய பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பாக கூட அவைகளுக்கு நீங்கள் வாக்களிக்க முடியும்.

பயனர்களின் திருப்தியையும், மகிழ்ச்சியையும் மற்றும் பேருந்து பயணத்தை அதிகரிக்க இது உதவும் என்று RTA நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், புதிய பேருந்து வழித்தடங்களுக்கு சுமார் 2590 பரிந்துரைக்கப்பட்ட கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அல் குசைஸிலிருந்து (Al Qusais) அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு பேருந்து வழித்தடம் துவங்க 413 வாக்காளர்கள் ஆதரவளித்துள்ளனர், இந்த புதிய வழித்தடத்திற்கு சுமார் 265 பேர் வாக்களித்துள்ளனர்.

மேலும்,148 பயனர்கள் கோல்டு சூக் – ஜாஃப்ஸா (Gold Souq-JAFZA) பேருந்து வழித்தடத்தை திறக்க வேண்டி வாக்களித்துள்ளனர்.

Loading...