UAE Tamil Web

கணினி டெஸ்க்டாப் மூலமாகவும் இனி வாட்ஸ்அப் கால் செய்யலாம்..!

whatsap

உலகம் முழுவதிலும் இருக்க கூடிய தகவல் பரிமாற்ற தொழில் நுட்பத்தில் வாட்ஸ்அப் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

- Advertisment -

இதற்கு முன் செல்போனிலிருந்து மட்டுமே வாட்ஸ்அப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது கணினி டெஸ்க்டாப் பதிப்பிலும் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும்.

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான (app) வாட்ஸ் அப்பில் வாய்ஸ் (voice call) மற்றும் வீடியோ கால் (video call) செய்யும் வசதியை வாட்ஸ்அப் இணைத்துள்ளது. இதையடுத்து பயனர்கள் டெஸ்க்டாப் திரையில் வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்த டெஸ்க்டாப் வாட்ஸ் அப்பில் பயனாளிகள் போர்ட்ரெய்ட் (portrait) மற்றும் லேண்ட்ஸ்கேப் (landscape) முறைகளில் பயன்படுத்த முடியும். இதில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் (end to end encrypt) என்றும் தெரிவித்துள்ளது.

பெரிய திரைகளில் அழைப்புகளை எளிதாக மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

பிக்விக்ஸ் சூம் (bigwigs zoom) மற்றும் கூகுள் மீட் (google meet) ஆகியவற்றிற்கு இணையாக இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்து அப்ளிகேசனுடனும் போட்டியிடும் எண்ணம் வாட்ஸ் அப்பிற்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

கடந்த புத்தாண்டு தினத்தன்று மட்டும் வாட்ஸ்அப்பில் 1.4 மில்லியன் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை பயனர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் நேரடி தொடர்புகள் தவிர்த்து வரும் இந்த சூழ்நிலையில் வாட்ஸ் அப் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் வரப்பிரசாதமாக உள்ளது.