ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், மலைகளில் த்ரில்லான ரைடு மேற்கொள்ளுபவர்களுக்காக ஜெய்ஸ் ஸ்லைடர்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 16 நாளை முதல் ராஸ் அல் கைமாவின் மிக உயர்ந்த மலை சிகரமான ஜெபல் ஜெய்ஸில் ரைடு செய்யலாம்.
ஜெபல் ஜெய்ஸ் மலைப்பகுதியின் ஹஜர் மலைத்தொடரைத் தாண்டிச் செல்லும்போது ஜெய்ஸ் ஸ்லைடர்கள் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் செல்லும். ரைடர்கள் எந்தவித பயமுமின்றி பாதுகாப்பாக சவாரியை மேற்கொள்ளலாம். ஜெய்ஸ் ஸ்லைடரில் பிரேக்கிங் சிஸ்டம் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஸ் பகுதியில் உள்ள வெல்கம் சென்டர் அலுவலகத்தில் டிக்கெட்டுகளை பெறலாம். ஜெய்ஸ் ஸ்லைடர் ரைடில் தனியகாவும் செல்லலாம், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்தும் செல்லலாம்.
ரைடின் போது பள்ளத்தாக்கு பகுதியில் வளைவுகள் த்ரில்லாகவும் இருக்கும். மேலும் மெய் சிலிர்க்க வைக்கக்கூடிய காட்சிகளையும் தவறாது கண்டு ரசிக்கலாம்.
அமீரகத்தின் மிக பெரிய சிகரமான ஜெபல் ஜெய்ஸின் ராஸ் அல் கைமா சுற்றுலாத் துறை பல்வேறு அம்சங்களை நடைமுறைபடுத்த உள்ளது. அதிலும் குறிப்பாக இது போன்ற சாகச சுற்றுலாவுக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஜெய்ஸ் ஸ்லெடர் டிராக்குகளின் தூரம்:
நீளம்: 6,036.7 அடி
கீழ் நீளம்: 4,248.7 அடி