UAE Tamil Web

ரமலான்: 27, 29 ஆம் நாள் தொழுகையின்போது இதைமட்டும் செய்யாதீர்கள் : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

prayer

ரமலான் மாதத்தின் முக்கியமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படும் 27 மற்றும் 29 ஆம் நாள் தொழுகைகளில் வழக்கத்தைவிட மசூதிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதை காரணமாகக்கொண்டு யாரும் சாலையிலோ, ரவுண்டானாக்களிலோ தொழுகை நடத்தக்கூடாது என ஷார்ஜா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

தராவீஹ் மற்றும் தஹாஜுத் தொழுகைகளை மக்கள் மசூதிகளிலே மேற்கொள்ளவேண்டும் எனவும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் பொது இடங்களில் தொழுகை நடத்தக்கூடாது எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ரமலான் மாதத்தில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் 27, 29 ஆம் நாள் இரவுத் தொழுகைகளில் பெருமளவு மக்கள் மசூதிகளில் கூடுவதால் நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இவர்கள் வெளியே தொழுகை நடத்துதல் கூடாது. இம்மாதிரியான செயல்களைத் தடுக்க 245 கூடுதல் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரார்த்தனையாளர்கள் ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்புக்குழு தொடர்ந்து கண்காணித்துவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.