விசேஷ கோரிக்கையுடன் துபாய் காவலர்களுக்கு அழைப்பு விடுத்த முதியவர்.!

Old Man Calls Dubai Police with Special Request

நேற்று அமீரக தேசிய கொடி தினம் வெகு சிறப்பாக அமீரகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் மதிப்புக்குரிய அமீரக தலைவர்கள் பல்வேறு இடங்களில் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தினர். மேலும், பல அமீரக வாசிகள் அவர்களின் வீடுகளிலும் அமீரக தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினார்கள்.

இந்நிலையில், அமீரகத்தை சேர்ந்த தேசபற்றுடைய ஒரு முதியவர் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட நினைத்தார். ஆனால், அவரின் உடல் நலக்குறைவால் அதனை செய்ய முடியவில்லை. இதனால் அவர் மனம் தளராமல், உடனே துபாய் காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து ‘தன் வீட்டில் தேசிய கொடி ஏற்ற உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்’.

அந்த முதியவரின் வேண்டுகளை மகிழ்ச்சியுடன் ஏற்ற துபாய் காவலர்கள், அவரின் வீட்டிற்கே வந்து தேசிய கொடியை ஏற்றிவைத்து சென்றனர். நேற்று நடந்த இந்த சம்பவத்தை துபாய் காவலர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.