UAE Tamil Web

அமீரகத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஓமான் செல்ல அனுமதி!

கொரோனா பரவல் காரணமாக அமீரகத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஓமான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. அமீரக எல்லைகள் மூடப்பட்டு சாலைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது அமீரகத்தில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்ததையடுத்து சாலை மார்க்கமாக வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஓமானிற்குள் நுழையலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஓமான் நாட்டிற்குள் நுழைய கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் நெகடிவ் பிசிஆர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெகு நாட்களுக்குப் பிறகு சாலை மார்க்கமாக ஓமானிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அமீரக மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து பலமுறை எல்லைகளை மூடிய ஓமான் அரசு தற்போது எல்லைகளை திறந்தது மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கியிருப்பது பல தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அமீரகம் – ஓமான் இடையிலான சாலை மார்க்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து வரும் நாட்களில் வர்த்தக ரீதியான போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 Shares
Share via
Copy link