போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடியா??

“போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது” என்று ஒரு வதந்தி தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் பொய் என்று துபாய் காவல்துறை மறுத்துள்ளதாக அமீரக ஊடகமான “அல் பாயான்(Al Bayan)” செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக துபாய் காவல்துறைக்கான கால் சென்டர் (901) இயக்குனர் Dr. முஹம்மது அலி ஹாமவ்டி கூறுகையில் “போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது” என்ற செய்தி உண்மையானது அல்ல. எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலியான செய்திகளை பரப்பாமல், உண்மையான செய்திகளை/தகவல்களை மட்டும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக “ஒன்பது மாதங்களுக்கு எந்த விதிமீறல்களையும் செய்யாத வாகன ஓட்டிகள் தங்களது போக்குவரத்து அபராதத்தில் 75 சதவீத தள்ளுபடியை பெறலாம்” என்ற அறிவிப்பை துபாய் காவல்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...