அபுதாபியில் ஏற்பட்ட விபத்து. ஒருவர் பலி, 7 பேர் காயம்.!

abudhabi car accident
Image Credit: Abu Dhabi Police

அபுதாபி பனியாஸ் (Baniyas) பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் மரணம், மேலும் 7 பேர் காயமடைந்தாக அபுதாபி போலீசார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தனர்.

நன்றாக சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென விலகி மற்ற கார்களுடன் மோதி, தடம் புரண்டு பனியாஸ் (Baniyas) பாலத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தைப்பற்றி அபுதாபியின் வெளி போக்குவரத்து காவல்துறை இயக்குனர் கர்னல் முகமது அல் ஷிஹி கூறுகையில், “திடீரென லேன்கள் மாற்றப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மற்ற வாகனங்கள் மீது இந்த கார் மோதியதில், தடம் புரண்டு பாலத்தின் விளிம்பில் கவிழ்ந்தது.” என்கிறார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அபுதாபி காவல்துறை விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி முதலுதவி அளித்து, காயமடைந்தவர்களை அல் ரஹ்பா மற்றும் மஃப்ராக் மருத்துவமனைகளுக்கு மாற்றினர்.

அனைத்து மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தை விட்டுவிட்டு பாதுகாப்பாகவும் கவனமாகவும் வாகனம் ஓட்டவும் என அபுதாபி போலீசார் ஓட்டுனர்களை வலியுறுத்துகின்றனர்.

Loading...