UAE Tamil Web

இந்தியர் ஓட்டிச்சென்ற கார் விபத்திற்குள்ளானது ; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம் – அமீரகத்தில் சோகம்..!

Road-accident-Umm-Al-Quwain-_

உம் அல் குவைனில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த இரு விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஷேக் சயீத் பின் சுல்தான் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் அதிவேகமாய் வந்த கார் ஒன்று மற்றொரு காரின்மீது மோதியிருக்கிறது. மோதப்பட்ட காரில் இருந்த 17 வயது ஏமிராட்டி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஓட்டிவந்த வாகனத்தில் 3 பேர் இருந்ததாகவும் மற்றொரு வாகனத்தில் 2 பேர் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இரவு 7 மணிக்கு, உம் அல் குவைனின் உம் அல் தாவூப் இண்டஸ்ட்ரீயல் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் காரை ஓட்டிச்சென்ற இந்தியர், வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி மீது மோதியிருக்கிறார். இதனால் படுகாயமடைந்த அந்நபர் உடனடியாக ஷேக் கலீஃபா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்.

Road-accident-Umm-Al-Quwain-_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap