துபாயில் கடந்த 5 நாளில் ஏற்பட்ட பல்வேறு சாலை விபத்துகளில் ஒரு ஓட்டுநர் உட்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக துபாய் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் துணை இயக்குநர் கர்னல் ஜுமா பின் சுவைதான் கூறுகையில், “வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை விட்டுச் செல்லாததாலும், வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிப்பது போன்ற பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறுவதன் காரணமாக விபத்துகள் நிகழ்கிறது” என்றார்.
மார்ச் 3 ஆம் தேதி, துபாய்-அல் ஐன் சாலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. அப்போது லாரி மீது டிரக் மோதியதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மார்ச் 4 அன்று எமிரேட்ஸ் சாலையில் ஷார்ஜாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் டிரக் மீது மோதியது. இதன் விளைவாக ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்த வாகனங்களுக்கு இடையே நடந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டதில் பலர் காயம் அடைந்தனர்.
பின்னர், அல் ரிபாத் பகுதியில் இரண்டு வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில், இரண்டு பேர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.