UAE Tamil Web

துபாயில் நடந்த சாலை விபத்துகளில் பெண் ஒருவர் உயிரிழப்பு – 12 பேர் காயம்!

Separate-Traffic-Accidents-in-Dubai

துபாயில் நடந்த சாலை விபத்துகளில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துபாய் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், “பொறுப்பற்ற முறையில் வாகனங்கள் ஓட்டுவதே இந்த விபத்துகளுக்கு காரணம் என்றார்”.

நேற்றிரவு அல் கைல் பகுதியில்  அந்தப் பெண் நியமிக்கப்படாத இடத்தில் சாலையைக் கடந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பிரிக் அல் மஸ்ரூய் கூறினார்.

இந்நிலையில், அல் கராமாவில் உள்ள புதிய சுரங்கப்பாதையில் பேருந்தும், மற்றொரு வாகனமும் மோதிய மற்றொரு விபத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

துபாய் ஹில்ஸுக்கு முன்னால், உம் சுகீம் சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இருவர் காயமடைந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, வாகனங்கள் லேன் டிரைவிங் செய்வதை பின்பற்றாமல் விபத்துக்குள்ளானதால் காயங்கள் ஏற்பட்டதாக, பிரிக் அல் மஸ்ரூய் கூறினார். இந்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்றவும் மற்றும் வேக வரம்புகளை கடைபிடிக்கவும் ஓட்டுநர்களை அல் மஸ்ரூய் வலியுறுத்தினார்.

“ஓட்டுனர்கள் எப்போதும் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டும். குறிகாட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கக்கூடாது. மேலும், சிறு விபத்துகள் ஏற்பட்டால், நடுரோட்டில் காரை நிறுத்த வேண்டாம்,” என பிரிகேடியர் சைஃப் முஹைர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap