ராஸ் அல் கைமா காவல்துறை ஆன்லைன் மோசடியை எதிர்கொள்ள ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
அதில், சமூகப் போலிஸ் குழு, விரிவான போலிஸ் நிலையங்கள் குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் குழு ஆகிய குழுக்களின் விரிவான ஒத்துழைப்புடன் ராஸ் அல் கைமா காவல்துறை, ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவால் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரத்தில் காவல்துறை நடவடிக்கைகளின் பணிப்பாளர் ஜெனரல் அப்துல்லா முன்கிஸ் மற்றும் விழிப்புணர்வுக் கிளை மற்றும் ஊடகப் பிரச்சாரங்களின் பணிப்பாளர் கேப்டன் சயீத் அல் மசாஃப்ரி மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பிரச்சாரமானது உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆன்லைன் மோசடி, மிரட்டி பணம் பறித்தல், தவறான வேலை வாய்ப்புகள் மற்றும் நிதித் திருட்டு போன்ற சமூக விழிப்புணர்வை மேம்படுத்துவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும் என்று அப்துல்லா முன்கிஸ் தெரிவித்தார்.