UAE Tamil Web

துபாய் விசா வைத்திருந்தால் மட்டுமே துபாய் வரலாம் – புதிதாக விசா விண்ணப்பிப்போருக்கு புதிய சிக்கல்!

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 5ம் தேதி முதல் அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்போர் இந்தியாவில் இருந்து அமீரகம் வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பல கட்ட பயண வழிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், துபாய் விசா வைத்திருப்போர் மட்டுமே நேரடியாக துபாய்க்கு வர முடியும் என எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில் பயணி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எமிரேட்ஸ் நிறுவனம், GDRFAவிடம் இருந்து முறையான ஒப்புதல் பெற்று துபாய் விசா வைத்திருந்தால் மட்டுமே துபாயில் தரையிறங்க முடியும் என தெரிவித்துள்ளது.

Passenger traffic at Dubai airport down 70% in 2020 over pandemic | Daily  Sabah

துபாய் அல்லாத விசா வைத்திருந்தால் துபாய்க்குள் வர முடியாது என கூறியுள்ளது. இதேபோல புதிய ரெசிடென்சி விசாவை விண்ணப்பித்து, அதன்மூலம் அமீரகம் வர தற்போது இயலாது எனவும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது மனைவிக்கு புதிதாக ரெசிடன்சி விசா எடுத்து துபாய்க்கு வர முடியுமா என பயணி ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கு பதிலளித்த எமிரேட்ஸ் நிறுவனம், புதிய விசா எடுத்து வர முடியாது என்றும் மேற்கொண்டு பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும் பட்சத்தில் துபாய்க்கு பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதேபோல இந்தியாவில் இருந்து துபாய்க்கு சுற்றுலா செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

13 Shares
Share via
Copy link