UAE Tamil Web

இவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து அமீரகம் வரலாம் : ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ்..!

Stock-Air-India--airlines_

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அமீரக அரசால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து 8 வகையான பயணிகள் மட்டும் அமீரகத்திற்கு வரலாம் என அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அந்த 8 வகையான பயணிகளைப் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில் அமீரக அரசினால் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வரலாம் என இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தகுதியுடைய நபர்கள் டிக்கெட் புக் செய்ய 00914440013001 அல்லது 00914424301930 என்ற எண்ணிற்கு கால் செய்யலாம் அல்லது அருகில் உள்ள தங்களது மையங்களை அணுகுமாறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்கள் ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Stock-Air-India--airlines_
12 Shares
Share via
Copy link