UAE Tamil Web

அதிர்ஷ்டம் இப்படியும் வரும்; துபாய் வாழ் தமிழருக்கு குலுக்கலில் கிடைத்த 5 லட்சம் திர்ஹம்ஸ்..!

ganesh

துபாயில் வசித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் ஜெயராமன் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஐடியல்ஸ் நிறுவனம் நடத்திய குலுக்கலில் சேர ஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக www.idealz.com இணையத்தில் இருந்து 50 திர்ஹம்ஸ் செலுத்தி உபெல் பேட்ஜ் (Ubel Badge) ஐ வாங்கியிருக்கிறார்.

இதனமூலம் குலுக்கலில் இணைந்த கணேஷிற்கு டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற டிராவில் 5 லட்சம் திர்ஹம்ஸ் பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஒரு சிறிய முயற்சி அவரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது.

இதுகுறித்து அவர் பேசுகையில்,” போட்டியில் வெற்றி பெற்றது குறித்து எனக்கு போன் வந்தபோது என்னால் அதை நம்பவே முடியவில்லை. எனக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என எப்போதும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதிர்ஷ்டத்தை நம்புபவர்களுக்கு நான் கூறுவது இதுதான்: போட்டிகளில் கலந்துகொள்ளுங்கள், அமீரகத்தை நேசியுங்கள். அனைத்தும் சாத்தியமே” என்றார்.

தனது சொந்த ஊரில் ஹோட்டல் வைப்பதுதான் தனது கனவு என்கிறார் 48 வயதான கணேஷ். தனது மகள்களின் படிப்புச் செலவிற்கு இந்தத் தொகை உதவும் எனவும் வறுமையினால் வாடும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐடியல்ஸ் நிறுவனம் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு நடத்திய பிரம்மாண்ட பரிசுப் போட்டியில் 2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை 10 பேர் வென்றனர். இப்போட்டி டிசம்பர் 2 ஆம் தேதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ganesh
14 Shares
Share via
Copy link