UAE Tamil Web

ஒரே ஒரு போர்டிங் பாஸ் இருந்தால் போதும்.. ஹாய்யா துபாய சுற்றிப் பார்க்கலாம்..!

எமிரேட்ஸின் விமானத்தின் போர்டிங் பாஸ்-ஐ வைத்து கோடை காலத்துக்கான பல்வேறு வாய்ப்புகளை பெற புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது மே 1 முதல் செப்டம்பர் மாதம் 30 வரையான 5 மாத காலத்துக்கு எமிரேட்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புக்களை வழங்க உள்ளது. My Emirates எனும் எமிரேட்ஸ் கோடை கால போட்ரிங் பாஸில் துபாய்க்குள் வருபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.

எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் தமது போர்டிங் பாஸ் மூலம் துபாய் முழுவதும் உள்ள நூற்றுக் கணக்கான விற்பனை நிலையங்கள் ஓய்வு, பொழுது போக்கு இடங்கள். உணவு உட்கொள்ளும் இடங்கள் என்பனவற்றில் சலுகைகளை பெற முடியும். இவற்றில் மே மாதத்தில் துபாய்க்கு வருபவர்களுக்கு மரீனா குரூஸ் ஆடம்பர கடல் பயணத்துக்கான ஒரு வாய்ப்பையும் பெறலாம்.

இதனை அனுபவிக்க எமிரேட்ஸின் ஒரு போர்டிங் பாஸ் மட்டுமே போதுமானது. மே 1 முதல் 31 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த சலுகை செல்லுபடியாகும்.

இது சம்பந்தமான மேலதிக விவரங்களை www.emirates.com/myemiratespass என்ற இணையத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap