துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (DEWA) மையம் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சோலார் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு புதுமையான ஓட்டுநர் இல்லாத பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
அந்த சோலார் பூங்காவில் உள்ள இன்னோவேஷன் சென்டர் மற்றும் இன்னோவேஷன் டிராக் ஆகியவற்றுக்கு பார்வையாளர்களை இந்த ஓட்டுநர் இல்லாத எலக்ட்ரிக் பஸ் அழைத்துச் செல்கிறது.
DEWA நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சயித் முஹம்மத் அல் தயிர், “சமீபத்திய சூரிய சக்தி மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும், அதன் சாதனைகளை முன்வைப்பதற்கும் DEWA முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
இந்த மையம் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை, காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை பார்வையாளார்களுக்கு அனுமதி அளிக்கிறது. இதற்கான நுழைவு டிக்கெட்டுகளை www.mbrsic.ae என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.