34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

துபாயில் குழந்தைகளுக்கான “ஆரஞ்சு வீல்ஸ்” மையம் திறப்பு.!

Orange-Wheels

எட்யூடெய்ன்மென்ட் சென்டரான (Edutainment Center) (கற்றல் மற்றும் பொழுதுபோக்கு மையம்) ஆரஞ்சு வீல்ஸ் (Orange Wheels) தனது முதல் கிளையை துபாயில் திறந்துள்ளது.

இந்த வண்ணமயமான விளையாட்டு மைதானம் ஏற்கனவே அபுதாபியில் இரண்டு இடங்களைக் கொண்டுள்ளது. இப்பொழுது துபாயிலும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் ஈர்ப்பதற்காக தனது கால் பதித்துள்ளது.

ஜுமேராவின் டவுன் சென்டரில் அமைந்துள்ள இந்த கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுப் பகுதிகள் உள்ளன, மேலும் ஆறு மாதங்களுக்கும் எட்டு மாதங்களுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கான சிறிய அளவிலான விளையாட்டு இடமும் உள்ளது.

அங்கே அந்த பச்சிளங்குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டு அம்சங்களும் குவிந்து கிடக்கின்றன.

இதைதவிர்த்து பெற்றோர்களுக்காக ஆரஞ்சு கபே என்று அழைக்கப்படும் ஒரு ஆன்-சைட் உணவகமும் இருக்கின்றது. அங்கே அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை அனுபவிக்கலாம்.

ஒரு கற்றல் இடமாகக் கருதப்படும் இந்த பொழுதுபோக்கு மையம், குழந்தைகள் புதிய திறன்களைப் பெறுவதற்கு உதவியாக அமையும் என நம்பப்படுகின்றது.

கட்டணம்:

முதல் ஒரு மணிநேரத்திற்கு – Dhs65

கூடுதல் மணிநேரத்திற்கு – Dhs40

ஒரு நாள் பாஸ் – Dhs200

மாதாந்திர பாஸ் – Dhs999

ஒரு மணி நேர Drop n Shop – Dhs80

நேரம்:
தினமும், காலை 10-10 மணி.

இடம்:
முதல் தளம், டவுன் சென்டர், ஜுமேரா, துபாய்,

 

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!