UAE Tamil Web

கோவிட்: பொதுமக்கள் துணி முகக்கவசங்களைத் தவிர்க்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!

mask

துணி முகக்கவசங்கள் வைரஸுக்கு எதிராக 47 சதவீதம் மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும் என ஆய்வில் தகவல்.

உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரகம் மருத்துவர்கள் சிறந்த பாதுகாப்பிற்காக துணியாலான முகக்கவசங்களுக்கு பதிலாக 3 அடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

குறிப்பாக, காட்டன் வகை துணி முகக்கவசங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக, சர்ஜிக்கல் மாஸ்க், KN95 அல்லது N95 முகக்கவசங்களைப் பொதுமக்கள் தேர்வு செய்யலாம்.

இது குறித்து RAK மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான டாக்டர் ஸ்வேதா பிரகாஷ் அடாட்டியா கூறியதாவது: “நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், துணி முகக்கவசங்கள் வெறும் 47 சதவீதம் மட்டுமே பாதுகாப்பை வழங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அதேசமயம் KN95 மற்றும் N95 உடன் சர்ஜிக்கல் முகக்கவசங்கள் 95 சதவீத பாதுகாப்பை வழங்குகின்றன.” என்றும்,

“ஒற்றை வால்வு அல்லது இரட்டை வால்வு முகக்கவசங்கள் தொற்றுநோயை பரப்பக்கூடும்.” என்றும் அவர் கூறினார்.

சிறப்பு முகக்கவசங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஷார்ஜாவில் உள்ள என்எம்சி ராயல் மருத்துவமனையின் குடும்ப மருத்துவ நிபுணர் டாக்டர் மொஹமட் ஸீடன் இது குறித்து கூறுகையில், “என் 95 மற்றும் கேஎன் 95 போன்ற இறுக்கமான முகக்கவசம் அணிவது தொற்று பரவுவதைத் தடுக்க சிறந்த வழிகள்.” என்றார்.

“கோவிட்-19க்கு எதிராக N95 95 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தாலும், மக்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவது விரும்பத்தகாதது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) முன்னணி சுகாதார ஊழியர்களுக்கே இதுபோன்ற முகக்கவசங்களை பரிந்துரைக்கிறது.” என்ற டாக்டர் அடாட்டியா,

வழக்கமான பயன்பாட்டிற்கு, 3-அடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் சிறந்த வழி, ஏனெனில் அவை நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த முகக்கவசங்கள் மருத்துவ அமைப்பிலும் அறுவை சிகிச்சை அறைகளிலும் மருத்துவர்களால் அணியப்படுகின்றன.” என்று விளக்கினார்.

“சரியான முகக்கவசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அப்பால், சுகாதார நிபுணர்கள் முகக்கவசத்தை சரியாக அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்” என்று கூறிய அவர்,

“முகக்கவசம் அணிந்தவர்கள் மூக்கை மூடாமல் இருப்பதை நான் காண்கிறேன், அதில் எந்த பாதுகாப்பும் இல்லை.

முகக் கவசத்தின் நோக்கம் ஒப்பனை அல்ல, அதை அணிந்த நபரைப் பாதுகாப்பதற்காக. என்றும் அவர் கூறினார்.

முகக் கவசத்தின் அவசியம் குறித்துப் பேசிய டாக்டர் அடாட்டியா அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் கூறியுள்ளார்.

“முகக்கவசங்கள் உங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் வகையில் சரியான பொருத்தத்தைக் கொண்டிருக்க வேண்டும். முகக் கவசத்தின் அளவு, அதை அணியும் விதம் மற்றும் முகக்கவசத்தின் இறுக்கம் ஆகியவை மிகவும் முக்கியம்.

முகக்கவசத்தின் உட்புற அடுக்கு வெளிப்படக்கூடாது மற்றும் கவனமாக கையாள வேண்டும். அதே முகக்கவசத்தை அதன் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

N95 ஐ எட்டு மணிநேரம் பயன்படுத்தலாம். இந்த முகக்கவசங்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று முறை கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

முகக்கவசம் ஈரமாக மாறும் தருணத்தில் மாற்றப்பட வேண்டும், அது ஈரமாவது எட்டு முதல் 10 மணி நேரத்திற்குப் பிறகு நடக்கும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

mask
3 Shares
Share via
Copy link