UAE Tamil Web

போலீஸ் என்று கூறி இளைஞரை காரில் கடத்தி சென்று தாக்கி பணம் பறித்த இருவர்.! பாதி வழியிலேயே நடந்த திடீர் திருப்பம்..

dubai

தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என்று கூறி ஏமாற்றி தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவரை கடத்தி கொண்டு சென்று, அந்த மனிதரிடமிருந்த பணத்தை திருடியதாக இரு பாகிஸ்தான் ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி துபாய் முதல் நிகழ்வு நீதிமன்றம் விசாரித்தது. அதன்படி பாதிக்கப்பட்ட 28 வயதான பாகிஸ்தான் நபர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல் கராமா பகுதியில் உள்ள தனது பகிரப்பட்ட குடியிருப்பில்தூங்குவதற்காக தயாராகி வந்தார். அப்போது அவரது நடை சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடைய இரு பிரதிவாதிகளும் அவரது பெயரைக் கேட்டபடியே அவரது குடியிருப்பிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் தங்களை போலீஸ் அதிகாரிகளாக காட்டி கொண்டு, பாதிக்கப்பட்டவரை தங்களுடன் காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவரோ அவர்களுடன் தாம் எந்த குற்றமும் செய்யவில்லையே என்று கூறி அவர்களுடன் செல்ல மறுத்துள்ளார். ஆனால் வந்தவர்கள் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கி கைகளை கட்டி, அவரது முகத்தை துணியால் மூடி தங்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அவரிடமிருந்த 3,200 திர்ஹம்ஸ் பணம் மற்றும் மொபைல் போனை பறித்துள்ளனர். பின்னர் அவரிடம் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக ஏதேனும் புகார் இருக்கிறதா என்று பிரதிவாதிகள் அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு தாம் துபாயில் குற்றவியல் பதிவு அல்லது புகார்கள் இல்லாமல் வாழும் ஒரு ஒழுக்கமான மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார். பின்வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று கேட்டு அவரை மீண்டும் அடித்துள்ளார்கள்.

எதிர்பாரா விதமாக அப்போது அவ்வழியே வந்த போலீஸ் ரோந்து படையினர் காரை தடுத்து நிறுத்தி விசாரித்த பின், பிரதிவாதிகளிடமிருந்து பாதிக்கப்பட்டவரை மீட்டு அவரது குடியிருப்பிற்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

போலீஸின் சாட்சியம்..

சம்பவம் பற்றி 24 வயதான போலீஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அவர் கூறியதாவது: குறிப்பிட்ட வழியே நான் ரோந்து சென்ற போது பிரதிவாதிகள் வந்த காரை பார்த்து சந்தேகம் ஏற்பட்டது. காரை நிறுத்தி விசாரித்த போது, காரில் இருந்த பாதிக்கப்பட்டவர் பிரதிவாதிகள் தங்களை காவல் அதிகாரிகள் என்று கூறி கொண்டு தன்னை அழைத்து சென்று பணம், போனை பிடுங்கி கொண்டதாக கூறினார் .

இதனை அடுத்து சந்தேக நபர்களின் அடையாளங்களை நான் கேட்டேன். ஒருவர் தனது எமிரேட்ஸ் ஐடியை எனக்குக் காட்டினார். இரண்டாவது நபர் அவரது ஐடி-யின் நகலை காட்ட மொபைலில் தேடினார். அப்போது அந்த மொபைலில் அவர்கள் அழைத்து செல்லும் பாதிக்கப்பட்டவரின் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட புகைப்படம் இருந்தது. அதனை நான் பார்த்த போது உடனே அந்த புகைப்படங்களை பிரதிவாதி அழிக்க முயன்றார். ஆனால் சட்டென்று அவரிடமிருந்து நான் மொபைலை எடுத்து விட்டேன். பின் அந்த காரை சோதனை செய்த போது 2.5 மில்லியன் திர்ஹம்ஸ் கள்ள நோட்டுகள் சிக்கின என்றார்.

இதனை அடுத்து பிரதிவாதிகள் மீது போலீஸ் போல நடித்தது, கடத்தல், கொள்ளை மற்றும் கள்ள நோட்டுகளை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றம் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மார்ச் 16-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap