UAE Tamil Web

எமிரேட்ஸ் டிராவின் முதல் வெற்றியாளர் – 777,777 திர்ஹம்சை வென்ற அதிர்ஷ்டசாலி..!

KhalidDad

அமீரக வரலாற்றில் முதன்முறையாக 77,777,777 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வழங்கும் எமிரேட்ஸ் டிராவின் முதல் குலுக்கல் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிக் தாத் 777,777 திர்ஹம்ஸ் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் எமிரேட்ஸ் டிராவின் முதல் போட்டியிலேயே பரிசை வென்ற அதிர்ஷ்டசாலியாக மாறியிருக்கிறார் தாத்.

அமீரக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 77,777,777 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை இந்த எமிரேட்ஸ் டிரா வழங்குகிறது. அஜ்மானைச் சேர்ந்த இந்நிறுவனம் பவளப்பாறை வளர்த்தலை பரவலாக்குவதை நோக்கமாகக்கொண்டு இந்த போட்டியைத் துவங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக மக்களின் வளர்ச்சியை இணைந்து மேற்கொள்ள இத்திட்டம் பெருமளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இப்போட்டியில் எப்படி கலந்துகொள்வது என்பது குறித்து விரிவாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

KhalidDad
4 Shares
Share via
Copy link