UAE Tamil Web

ஷார்ஜாவில் அரங்கேறிய கொடூர கொலை..! தேடுதல் வேட்டையில் போலீசார்..!

crime scene

ஷார்ஜாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

கடந்த செவ்வாய் அன்று ஷார்ஜாவின் அல் புட்டினா பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பல நபர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அதிகாலை 1 மணிக்கு நேரில் பார்த்த நபர் ஒருவர் குற்றம் நடந்த இடத்திலிருந்து ஷார்ஜா காவல்துறைக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஷார்ஜா காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த நபரை மீட்டு அருகிலிருந்த அல் கஸிமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதுதான் அவரது அந்தரங்க உறுப்பில் கடுமையாக அடிபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலையை செய்தது யார் என தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் சந்தேகத்திற்குரிய நபர்கள் பாதிக்கப்பட்டவரை அவரது அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கியதன் விளைவாகவே அவர் இறந்துள்ளார் என்று ஷார்ஜா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியவர்களை பிடிக்க ஷார்ஜா போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.