தன்னுடைய நண்பனுக்காக ஓட்டுனர் பயிற்சிக்கு சென்ற இளைஞருக்கு சிறை…

தனது நண்பனுக்கு பதிலாக ஓட்டுனர் உரிமம் பயிற்சிக்கு சென்ற இளைஞர் துபாய் போலீஸாரிடம் பிடிபட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பனுக்காக ஓட்டுனர் உரிமம் பயிற்சிக்கு சென்ற போது துபாய் போலீஸாரிடம் பிடிபட்டார். இந்த துணிகர செயலுக்கு எமிரேட்ஸ் ஐடி மற்றும் இதர ஆவங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து இந்த சட்ட விரோதமான செயலுக்கு துபாய் கோர்ட் அவருக்கு 3 மாத காலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் தண்டனை நிறைவேறிய பின் தன்னுடைய நாட்டுக்கு திரும்பி அனுப்ப உத்தரவிட்டது.

தன்னுடைய நண்பனிடம் இந்த சட்ட விரோதமான செயலுக்கு 1000 திரஹம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த செயலை செய்ய தூண்டிய இளைஞனுக்கும் அதே போல் 3 மாதம் சிறை தண்டனை விதித்து துபாய் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் சிறை தண்டனை நிறைவேறிய பின் அவருடைய நாட்டுக்கு திரும்பி அனுப்ப உத்தரவிட்டது.

இந்த சம்பவம் துபாய் ஓட்டுனர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...