29.1 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

அக்டோபர் 22-ல் உலக சாதனை படைக்க தயாராக உள்ள பாம் ஜுமேரா..

palm

உலகிலேயே மிகப்பெரிய நீரூற்று துபாய் பாம் ஜுமேராவில் விரைவில் துவக்கப்பட்ட உள்ளது. துபாயில் ஏற்கனவே சாதனை படைத்த ஒரு நீரூற்று உள்ள நிலையில், அதை முறியடிக்கும் வகையில் மற்றொரு பிரமாண்ட நீரூற்றை துபாய் இந்த மாதம் துவக்க உள்ளது.

உலகின் மிகப்பெரிய நீரூற்று என கின்னஸ் உலக சாதனையை படைக்க, அக்டோபர் 22 வியாழக்கிழமை துவக்கப்பட உள்ள ‘பாம் நீரூற்று’ (Palm Fountain) காத்திருக்கிறது. இந்த பாம் நடன நீரூற்று(dancing fountain) துபாய் மாலில் உள்ள “துபாய் நீரூற்றை”(Dubai Fountain) இரண்டாவது இடத்திற்கு தள்ள உள்ளது.

பாம் ஜுமேராவின் பொழுதுபோக்கு பகுதியான தி பாயிண்டில்(the Pointe) ஏற்கனவே அமைந்துள்ள உற்சாகமூட்டும் உணவகங்கள், கடற்கரை மற்றும் அட்லாண்டிஸின் வியப்பூட்டும் காட்சிகள், தி பாம் வரிசையில் தற்போது இப்பகுதியை கண்டுகளிக்க ‘பாம் நீரூற்று’ விரைவில் சேரவுள்ளது. சாதனை நீரூற்றின் துவக்க விழாவை பொது மக்கள் இலவசமாக காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு துவங்கி நள்ளிரவு வரை நீடிக்க உள்ள துவக்க விழாவில் முழு நாள் கொண்டாட்டங்களும் அடங்கும். நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைகளும்(fireworks show) நடைபெற உள்ளது.

அக்டோபர் 22 சரியாக இரவு 8 மணிக்கு தி பாயிண்டில் உள்ள 30 வெவ்வேறு உணவகங்களிலிருந்து பார்வையாளர்கள் “தி பாம் நீரூற்று” நிகழ்ச்சியின் காட்சிகளை ரசித்து மகிழலாம். முழு நாள் நிகழ்வை பார்க்க பொது மக்கள் பதிவு(registration) செய்து கொள்ள வேண்டும். முதலில் பதிவு செய்யும் 5,000 நபர்களுக்கு இலவச கைப்பட்டைகள் (LED wrist band) வழங்கப்பட உள்ளது.

14,000 சதுர அடி கடல் நீரில் பரவியிருக்கும், “பாம் நீரூற்றின்” சூப்பர் ஷூட்டர் 105 மீட்டர் உயரம் வரை நீரை காற்றில் செலுத்தி, 3,000-க்கும் மேற்பட்ட எல்.இ.டி விளக்குகளுடன் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளது. உலக சாதனை படைக்க உள்ள பாம் நடன நீரூற்று நாள்தோறும் இரவு 7 மணி முதல் 12 மணி வரை, 5 வெவ்வேறு செயல்பாடுகளுடன்(performances) 20 காட்சிகளை(shows) கொண்டிருக்கும். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் நடத்தப்படும் காட்சிகள், 3 நிமிடங்களுக்கு நீடிக்கும்.

‘பாம் நீரூற்று’ வாட்டர் டேங்க் அல்லது வடிகட்டும் உபகரணங்கள்(filtration equipment) ஏதுமின்றி கடலில் இருந்து நேரடியாக நீரை எடுத்து சுழற்றி மகிழ்விக்க உள்ளது. இந்த நீரூற்று இருபுறமும் 86 ஸ்பீக்கர்களை கொண்ட உயர் செயல்திறன் கொண்ட ஆடியோ அமைப்பை கொண்டுள்ளது. மேலும் துபாயில் பல வண்ணங்களை கொட்டி மகிழ வைக்கும்  ஒரே நீரூற்றாக அமைய உள்ளது.

கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் பிளாட்டினம்லிஸ்ட்(PlatinumList) வெப்சைட்டிற்கு சென்று பதிவு செய்து கொண்டால் டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



error: Alert: Content is protected !!