UAE Tamil Web

அமீரகத்தில் இன்று துவங்கும் பேரீச்சம்பழக் கண்காட்சி – பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு..!

date-festival

அமீரகத்தில் வருடந்தோறும் அல் தைத் பேரீச்சம்பழக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில்துறைக்கான கூட்டமைப்பு (SCCI) இந்த கண்காட்சியை ஒருங்கிணைக்கிறது. இந்நிலையில் 5 வது அல் தைத் பேரீச்சம்பழக் கண்காட்சி எக்ஸ்போ அல் தைத் – தில் இன்று துவங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த இனிப்பான கண்காட்சியை மக்கள் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையில் கண்டுகளிக்கலாம்.

ஷார்ஜா மட்டுமல்லாது அமீரகம் முழுவதிலும் விளைவிக்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்படும். உள்ளூர் பேரீச்சம்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள், பேரீச்சம்பழ உற்பத்தியாளர்களுக்கு இங்கே சுவாரஸ்யம் மிகுந்த போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்தப் போட்டிகளில் 2,000 முதல் 30,000 திர்ஹம்ஸ் வரையில் வெல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். மொத்தமாக 15 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளதாக SCCI தெரிவித்துள்ளது.

பங்கேற்கும் விவசாயிகள், பேரீச்சம்பழ உற்பத்தியாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கோடு இந்தாண்டு பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வைக்கு வைக்கப்படும் பேரீச்சம்பழங்கள் கனிந்தவையாகவும் அவை மெக்ரேஃபா (Mekhrafa)-வில் டெலிவரி செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.

அதேபோல உயர்வகை பிரிவில் (elite category) பேரீச்சம்பழங்களை சமர்ப்பிக்கும் போது குறைந்தது 3 வகைகள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் வைக்கப்படும் பேரீச்சம்பழங்கள் 3 கிலோ இருத்தல் வேண்டும் என இதில் கலந்துகொள்ளும் விவசாயிகள், பேரீச்சம்பழ உற்பத்தியாளர்களுக்கு விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. கலாஸ் (Khalas) மற்றும் குனைஸி (Khunaizi) ஆகிய இரண்டு வகைகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பேரீச்சம்பழங்கள் மட்டுமல்லாது உள்ளூரில் விளைந்த மாம்பழங்கள் மற்றும் சிவப்பு ஃபிக் (red figs) ஆகியவையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. வாய்ப்புள்ளோர் சென்று விதவிதமான பேரீச்சம்பழங்களை கண்டுவாருங்கள்.

date-festival
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap