UAE Tamil Web

அமீரகத்தில் JEE தேர்வு மையம் அமைக்க இந்திய பெற்றோர்கள் வலியுறுத்தல்!

இந்தியாவில் உள்ள தலைசிறந்த பொறியியல் கல்விக்கூடங்களில் கல்வி பயில JEE எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JEE Mains, JEE Advanced என இரு தேர்வுகளையும் வென்றால் மட்டுமே ஐஐடி போன்ற உயர் கல்வி நிலையங்களில் இடம் கிடைக்கும். இதற்காக இந்தியா மட்டுமின்றி அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள மாணவர்களும் இந்த தேர்வுக்கு போட்டிப் போட்டு தயாராவது வழக்கம்.

JEE Advanced 2021: Preparation tips to crack exam without coaching | Education News,The Indian Expressஇந்த நிலையில் அமீரகத்தில் JEE Mains தேர்வு நடத்தப்பட்ட நிலையில் JEE Advanced தேர்வுக்கான தேர்வு மையம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. வரும் அக்டோபர் 3ம் தேதி இந்த தேர்வானது இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விமானம் மூலம் தேர்வு எழுத சென்று திரும்புவது இயலாத காரியம் என்பதால் 95 பெற்றோர்கள் அமீரகத்திலேயே தேர்வு மையம் அமைக்க இந்தியாவின் தேசிய தேர்வு முகமையை வலியுறுத்தியுள்ளனர். இதற்காக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் துபாயில் உள்ள துணை தூதரகத்திற்கும் மனுவும் அளித்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த JEE Mains தேர்வு துபாயில் உள்ள 3 மையங்களில் நடத்தப்பட்ட நிலையில், மாணவர்கள் நலன் கருதி JEE Advanced தேர்வுக்கும் மையம் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவ கல்வி பயில்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு முதல் முறையாக அமீரகத்தில் தேர்வு மையத்தை ஒதுக்கி இந்திய தேசிய தேர்வு முகமை அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link