புஜைரா மார்க்கெட்டின் பகுதிகள் காற்று மற்றும் கன மழையால் சேதம் !

Parts of Fujairah market destroyed by wind, heavy rain..! (Photo : Khaleej Times)

கடந்த இரண்டு நாட்கள் பெய்த கடுமையான மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக புஜைராவில் ஒரு பாரம்பரிய சந்தையின் பெரிய பகுதிகள் சேதம் அடைந்தது.

இந்நிலையில், எமிரேட்டின் பல பகுதிகள் குறிப்பாக பள்ளத்தாக்குகள் மற்றும் மலைப்பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, எமிராட்டிய முகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

திப்பா அல் ஹிஸ்ன், திப்பா அல் புஜைரா, கல்பா மற்றும் கோர் ஃபக்கன் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையம் தகவலின் படி, புஜைரா துறைமுகத்தில் 53.4 மிமீ, கோர் ஃபக்கனில் 42.6 மிமீ, மசாபியில் 36 மிமீ, திபா அல் புஜைரா நகரில் 32.6 மிமீ மற்றும் டிதானா பகுதியில் 31.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடும் மழை மற்றும் அதிக காற்று காரணமாக பார்க்கிங் மறைப்புகள், வெளிப்புற கதவுகள், சாலை தடை கருவிகள் மற்றும் அடையாள பலகைகள் கடுமையான சேதம் அடைந்ததாக, புஜைரா Police cheif மேஜர் ஜெனரல் முகமது அகமது பின் கானேம் தெரிவித்துள்ளார்.

Loading...