துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் இங்கிலாந்து சென்றுக்கொண்டிருந்த பயணிகளில் ஒருவர் ஒழுங்கீன நடத்தையால் கைது செய்ப்பட்டார்.
துபாயில் இருந்து மான்செஸ்டர் செல்லும் EK019 விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸின் விமான நிறுவனத்தின் அறிக்கையில், 8 மணி நேர விமான பயணத்தில் 4 மணிநேரம் அவர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாகவும், மற்ற பயணிகளிடமிருந்து அவரை தனிமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயணத்தின் போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு முழு பாதுகாப்புக்கு அளிக்கப்பட்டதாகவும் எமிரேட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
துபாயிலிருந்து மான்செஸ்டர் விமான நிமையத்தில் தரையிறங்கியதும், ஒழுங்கின செயலில் ஈடுபட்ட பயணியிடம் போலீசார் விசாரனை நடத்தினர்.
இதனை அடுத்து மான்செஸ்டர் போலிஸார், அந்த 29 வயதுடைய விமான பயணியை கைது செய்ததாகவும் பின்னர் விசாரணை நிலுவையில் அவர் விடுவிக்கப்பட்டதாவும் பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.