இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வருவதற்கு முன் பயணிகள் PCR சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கான PCR சோதனையை தளர்வுப்படுத்தியுள்ள அமீரக அரசின் உத்தரவை தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளும், தடுப்பூசி போடாத பயணிகளும் புதுப்பிக்கப்பட்ட இந்த வழிமுறையில் வரலாம்.
அதன்படி WHO அல்லது அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிக்கான சான்றிதழ்களுடன் QR குறியீடு உடன் சமர்பிக்க வேண்டும்.
தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கு, விமானத்தில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட நெகடிவ் கொரோனா சோதனைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி போடப்படாத பயணியாக இருந்தால் ஒரு மாத காலத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததற்கான QR குறியீடு உடன், அதிகாரிகளால் வழங்கப்பட்ட சரியான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
இந்த பயணிகள் அமீரகத்திற்கு வந்தவுடன், PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் எதிர்மறையான சோதனை முடிவு வரும் வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு விமானங்களில் வரும் பயணிகளுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.