தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் இனி அபுதாபிக்கு வர PCR பரிசோதனை செய்ய தேவை இல்லை என்று எதிஹாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எதிஹாட் விமான நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில்,” கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள், கொரோனா நோயிலிருந்து குணமடைந்ததற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அல்லது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது.
If Abu Dhabi is your final destination, you’ll just need to take one PCR test on arrival at Abu Dhabi airport which is free of charge.
— Etihad Airways (@etihad) February 26, 2022
மேலும், பயணிகள் அபுதாபி விமான நிலையத்திற்கு வந்தவுடன் இலவச கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிஹாட் விமான நிறுவனம் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
If Abu Dhabi is your final destination, you’ll just need to take one PCR test on arrival at Abu Dhabi airport which is free of charge.
— Etihad Airways (@etihad) February 26, 2022
அமீரகம் வழியாக வேறு ஒரு நாட்டிற்கு பயணம் மேர்கொள்ளும் பயணிகள், தாங்கள் சென்றடையும் நாட்டில் ஏதேனும் கொரோனா பாதுகாப்பு தொடர்பான தேவைகள் இருந்தால் மட்டும் பரிசோதனை மற்றும் தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அபுதாபியிலிருந்து பயணிக்கலாம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
