அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு வருகைத்தரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு PCR பரிசோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமீரகம் மற்றும் இந்தியாவுக்கு பயணிக்கும் பயணிகள் புறப்படுவதற்கு முன் RT-PCR சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி முழுவதுமாக செலுத்திக்கொண்ட பயணிகள் அதற்கான சான்றிதழை ‘ஏர் சுவிதா’ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தாத பயணிகள் கொரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கொரோனா பரிசோதனை புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பரிசோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று முதல் இந்தியாவின் 9 நகரங்களுக்கு விமான சேவையை வழங்கி அதிகரிப்பதன் மூலம் வாரத்திற்கு 170 விமானங்கள் இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.