UAE Tamil Web

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் – 3 ஆம் பிடித்தது அமீரகம் ; இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

UAE-passport_

கனடாவைச் சேர்ந்த நிதி ஆலோசக குழுமமான ஆர்டன் கேப்பிடல் இந்த வருடத்திற்கான வலிமைவாய்ந்த உலகளாவிய பாஸ்போர்ட்களின் பட்டியலை (Global Passport Power Ranking 2021) வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமீரகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதாவது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மட்டுமே கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா எடுக்காமலேயே பயணிக்கலாம் என்பது இந்தப் பட்டியல் தயாரித்தலில் மிகமுக்கிய பங்காற்றியிருக்கிறது. இதனை மொபிலிட்டி ஸ்கோர் என்கிறார்கள். அதன்படி அமீரகத்தின் மொபிலிட்டி ஸ்கோர் 134 ஆகும்.

அதாவது அமீரகத்திலிருந்து 86 நாடுகளுக்கு நீங்கள் சுற்றுலா விசாகூட எடுக்காமல் பயணிக்கலாம். கூடுதலாக 48 நாடுகளுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பயணத்தின்போதோ விசா எடுத்துக்கொள்ளலாம்.

பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்து 136 மொபிலிட்டி ஸ்கோரைக் கொண்டுள்ளது. உங்களிடம் நியூசிலாந்து பாஸ்போர்ட் இருந்தால் உங்களால் 92 நாடுகளுக்கு நீங்கள் சுற்றுலா விசாகூட எடுக்காமல் பயணிக்கலாம். கூடுதலாக 44 நாடுகளுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பயணத்தின்போதோ விசா எடுத்துக்கொள்ளலாம்.

பின்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, அயர்லாந்து, ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் அமீரகம் மூன்றாம் இடத்தை பங்கிட்டுக்கொள்கிறது.

பட்டியலில் இந்தியாவிற்கு 63 ஆம் இடமும் பாகிஸ்தானிற்கு 79 வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் பலவீனமான பாஸ்போர்ட்டுகள் கொண்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் சோமாலியா ஆகியவை முறையே 83, 82, 81 மற்றும் 80 வது இடத்தில் இருக்கின்றன.

டாப் 10 வலிமைவாய்ந்த பாஸ்போர்ட்கள்

  1. நியூசிலாந்து
  2. ஜெர்மனி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா
  3. யுஏஇ, பின்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, அயர்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா
  4. சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், பிரான்ஸ், போர்ச்சுகல், லக்சம்பர்க், செக் குடியரசு, ஹங்கேரி
  5. மால்டா, ஸ்லோவேனியா, கிரீஸ், போலந்து, ஸ்லோவாக்கியா, இங்கிலாந்து
  6. நோர்வே, லிதுவேனியா
  7. சிங்கப்பூர், எஸ்டோனியா, லாட்வியா
  8. ஐஸ்லாந்து, கனடா
  9. சைப்ரஸ், குரோஷியா, லிச்சென்ஸ்டீன், ரோமானியா
  10. பல்கேரியா
UAE-passport_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap