அவசரகால பாஸ்போர்ட் சேவைகளை வழங்க அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் ஒரு சிறப்பான முடிவை எடுத்துள்ளது. இதன்படி இனி Walk-In சேவைகள் மூலம் Tatkal முறையில் பாஸ்ப்போர்ட்களை வழங்க அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் முடிவெடுத்துள்ளது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சென்ற மே மாதம் 22 முதல் தொடர்ந்து இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் Walk-In பாஸ்போர்ட் சேவா முகாம்களை ஏற்பாடு செய்து அதை வெற்றிகரமாக நடத்தியும் முடித்தது.
இரண்டு வாரங்கள் நடந்த இந்த முகாமில் சுமார் 2000 பாஸ்ப்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன என்று தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை நிரவர்தி செய்ய Appointment பெறுவது சிரமமாக உள்ளது என்று பலர் தங்கள் கவலைகளை முன்வைத்த நிலையில் தற்போது Tatkal சேவைக்கும் Walk-inஐ அறிமுகம் செய்துள்ளது இந்திய தூதரகம்.
தற்போது துபாயில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த சேவை, விரைவில் அமீரகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Renewal விண்ணப்பங்களுக்கான Tatkal விண்ணப்பங்கள் ஒரே நாளில் Process செய்து தரப்படும்.
மேலும் இதில் போலீஸ் verification இல்லை என்பதால் மிகக்குறைந்த அளவிலான, அதிலும் அதிக தேவை உள்ள tatkal விண்ணப்பங்களை மட்டுமே Process செய்ய அனுமதி அளித்துள்ளது தூதரகம்.