UAE Tamil Web

துபாய் திரும்பும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு PCR டெஸ்ட் அவசியமில்லை!

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்புவதற்கான விமான போக்குவரத்து தடையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் 2 தவணை தடுப்பூசி, PCR டெஸ்ட் உள்ளிட்டவைகளை முறையாக எடுத்திருந்தால் மட்டுமே அமீரகம் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Emirates to resume flights from India to Dubai from June 23

விமானத்தில் ஏறும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் எடுத்திருக்க வேண்டும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்த நிலையில் அதனை தற்போது தளர்த்தி துபாய் வருபவர்கள் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என புதிய அறிவிப்பு ஒன்றை அண்மையில் எமிரேட்ஸ் வெளியிட்டது. இந்த நிலையில் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் துபாய் திரும்பும் பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அது தேவை இல்லை என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் புதிய தளர்வை அளித்துள்ளது. இந்தியர் ஒருவர் ட்விட்டரில் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கான பயண விபரங்களை கேட்டபோது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கு PCR பரிசோதனை தேவையில்லை எனும் அறிவிப்பால் துபாய் திரும்பும் பெற்றோர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

4 Shares
Share via
Copy link