துபாய் செல்லும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் வரும் பயணிகள் 6 மணி நேரத்திற்கு முன் கொரோனா நோயை கண்டறிய உதவும் ரேபிட் PCR பரிசோதனை எடுக்க கட்டாயப்படுத்தப்படிருந்தது,
பரிசோதனை முடிவு இருந்ததால் தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் என துபாய் அறிவித்து இருந்தது. இதனால் கடந்த 1 வருடமாக சென்னை விமான நிலையத்தில் ரேபிட் PCR பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் துபாய் போன்ற நாடுகளுக்கு வரக்கூடிய பயணிகளுக்கு 6 மணி நேரத்திற்கு முன் ரேபிட் PCR பரிசோதனை முடிவு தேவை இல்லை என்றும், துபாய் விமான நிலையத்தில் பயணிகளுக்கு இலவசமாக ரேபிட் PCR பரிசோதனை செய்யப்படும் என்றும் துபாய் அறிவித்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் ரேபிட் PCR பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சென்னைக்கு வரக்கூடிய பயணிகளுக்கு சதவீத அடிப்படையில் ரேபிட் PCR பரிசோதனை கட்டாயம் என்பதால் பரிசோதனை மையம் தொடர்ந்து இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.