UAE Tamil Web

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்வது அவசியம்!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமீரகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஒருசில விதிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது. தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்கள் வாரந்தோறும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற விதியை மாற்றி தற்போது 2 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 29ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது. துறை சார்ந்த அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் விதிவிலக்கானவர்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை ஸ்வாப் டெஸ்ட் மூலம் கொரோனா தொற்று இல்லாததை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஒப்பந்த அடிப்படையில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டனரா என்பதை அந்தந்த ஒப்பந்த நிறுவனங்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் இதுவரை 73% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

2 Shares
Share via
Copy link